ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வாலிபர் கைது
ஆரணியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி
ஆரணியில் ஏ.டி.எம். மையத்தில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஏ.டி.எம். மையம்
ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணி வெற்றிலை காரர் தெருவை சேர்ந்த ஜோதிகுமாரின் மகன் பாலகுமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளராக கவனித்து வருகிறார்.
இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார்.
அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் பாலகுமரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவங்களை போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.