7 மாதம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது


7 மாதம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
x

7 மாதம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரியில் கடந்த 2010-ம் ஆண்டு அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலை (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் வானுமாமலைக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நாங்குநேரி போலீசார் வானுமாமலையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.


Next Story