ரெயில் கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
ரெயில் கூரை மீது ஏறியபோது மின்சாரம் தாக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் கடந்த 9-ந்தேதி சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த அபிலேஷ் என்ற வாலிபர் மது போதையில் திடீரென பிளாட்பாரத்தில் நின்றிருந்த புறநகர் ரெயில் பெட்டியின் கூரை மீது ஏறி மின் ஒயரை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மற்றும் ரெயில்வே போலீசார் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அபிலேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story