ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பலி


ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பலி
x

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

மீன்பிடிக்க சென்றார்

செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 27), தனியார் மார்க்கெட்டிங் பிரிவில் விற்பனை முகவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை பணியில் இருந்து வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மாலை 5 மணி அளவில் செய்யாறு அருகே உள்ள புளிரம்பாக்கம் ஏரியில் நண்பருடன் மீன் பிடிக்க சென்றார்.

ஏரியில் மீனுக்காக வீசப்பட்டிருந்த வலையை எடுக்க ஏரியில் இறங்கிய போது முத்து சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய முத்துவை தேடினர்.

2 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இருள் சூழ்ந்ததால் தேடும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை ஏரியில் பிணமாக மிதந்த முத்துவின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் செய்யாறு போலீசார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story