சென்னை மணலியில் உள்ள பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து
தீயை அணைக்கும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை அருகே மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெயிண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று நண்பகலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மீஞ்சூர், மணலி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை பரவியது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story