பங்களாப்புதூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய டிப்பர் லாரி; போக்குவரத்து பாதிப்பு

பங்களாப்புதூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய டிப்பர் லாரி; போக்குவரத்து பாதிப்பு
x

பங்களாப்புதூரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் இறங்கிய டிப்பர் லாரி; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

டி.என்.பாளையம்

கோபியில் இருந்து ஜல்லி கல் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று நேற்று மாலை பங்களாப்புதூர் மூன்று ரோடு பஸ் நிறுத்தம் வந்து நின்றது. அப்போது பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்டு மண்ணை போட்டு மூடிய குழியில் எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி இறங்கியது.

இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கிரேன் கொண்டு வரப்பட்டு குழியில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது. பின்னர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை மண்ணை கொட்டி சீர்படுத்தினர். இதனால் பங்களாப்புதூர்-கோபி சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story