சாலை விபத்தில் தக்காளி வியாபாரி பலி


சாலை விபத்தில் தக்காளி வியாபாரி பலி
x

தோகைமலை அருகே நடந்த சாலை விபத்தில் தக்காளி வியாபாரி பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

கரூர்

தக்காளி பலி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நாகனூர் ஊராட்சி மேட்டுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 40). தக்காளி வியாபாரி. இந்தநிலையில் ஆறுமுகம் கடந்த 17-ந்தேதி வியாபாரத்துக்கு சென்று விட்டு இரவு தோகைமலையில் இருந்து தனது மனைவி செல்லம்மாள், அதே பகுதியை சேர்ந்த சிறுப்பாயி ஆகியோருடன் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிந்தார்.மேட்டுப்பட்டி பகுதியில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகம், செல்லம்மாள் மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தோகைமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

பின்னர் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.அப்போது விபத்தை ஏற்படுத்திய வாகனம் கழுகூர் அருகே உள்ள ஒரு தனியார் பைப் லைன் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story