கடலூர் முதுநகர் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்


கடலூர் முதுநகர் அருகே சாலையோர பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பஸ் சிக்கியது.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூரில் இருந்து நேற்று காலை சுற்றுலா பஸ் ஒன்று சிதம்பரம் நோக்கி புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் பகுதியில் சென்ற போது, டிரைவர் சாலையோரமாக பஸ்சை ஓட்டிச் சென்றார்.

அப்போது நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் சேறும் சகதியுமாக சாலை காணப்பட்டதால், எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் பஸ் சிக்கி சாய்ந்தபடி நின்றது. இதனால் பதறிய பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டப்படி, பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ் வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story