அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கிய ெரயில்


அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கிய ெரயில்
x

ராஜபாளையம் அருகே தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் ரெயில் சிக்கியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தண்டவாளத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியில் ரெயில் சிக்கியது. டிரைவரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின்கம்பி அறுந்து விழுந்தது

விருதுநகர்-தென்காசி இடையே ரெயில்பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் ராஜபாளையம் அருகே சோழபுரம் நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் மின்மயமாக்கும் பணிகளுக்காக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பி நேற்று முன்தினம் நள்ளிரவில் தண்டவாளத்தில் அறுந்து விழுந்து கிடந்தது. இரவு நேரம் என்பதால் அதனை யாரும் கவனிக்கவில்லை.

இ்ந்தநிலையில் அந்த நேரத்தில் நெல்லையிலிருந்து தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியாக சென்னை- தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் வந்தது. தண்டவாளத்தில் மின் கம்பி கிடப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் கவனித்தார். உடனே அவர் ரெயிலை நிறுத்துவதற்காக வேகத்தை குறைத்தார்.

அசம்பாவிதம் தவிர்ப்பு

இருப்பினும் தண்டவாளத்தில் கிடந்த மின் கம்பி ரெயிலின் என்ஜின் மற்றும் சக்கரத்தில் சிக்கியது. பின்னர் ெரயில் நிறுத்தப்பட்டது.

மின் கம்பி அறுந்து கிடந்தது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபாளையத்தில் இருந்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி இருந்த மின்கம்பியினை அகற்றினர். பின்னர் அறுந்து தொங்கிய மின்கம்பியையும் சீரமைத்தனர். அதுவரை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சீரமைப்பு பணிக்கு பிறகு 1 மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

தண்டவாளத்தில் மின்கம்பி கிடந்ததை கவனித்து ரெயிலின் வேகத்தை குறைத்து அதன் டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Related Tags :
Next Story