கீழ்பவானி வாய்க்கால் கரையில் விழுந்த மரம்; அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்கால் கரையில் விழுந்த மரம்; அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சியை அடுத்த செல்லப்பகவுண்டன்வலசு பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் உள்ளது. இங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் கரை வழியாக ராக்கியாபாளையம், ஈஞ்சம்பள்ளி, கோவில்பாளையம், சின்னசாமிபுரம், குமரம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு செல்லும் விவசாயிகள் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த காற்றில் செல்லப்பகவுண்டன்வலசு வாய்க்கால் கரையில் இருந்த பெரிய மரம் ஒன்று விழுந்தது. வாய்க்காலின் குறுக்கே விழுந்ததால் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், விவசாயிகள் என பலரும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வாய்க்கால் கரையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.