திருவல்லிக்கேணியில் நடைபாதையில் முறிந்து விழுந்த மரம்


திருவல்லிக்கேணியில் நடைபாதையில் முறிந்து விழுந்த மரம்
x

திருவல்லிக்கேணியில் நடைபாதையில் மரம் முறிந்து விழுந்தது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி டேம்சாலையில் உள்ள தனியார் வங்கி வளாகத்தில் இருந்த மரத்தின் கிளை நேற்று காலை திடீரென முறிந்து சாலையை ஒட்டியுள்ள நடைபாதையில் விழுந்தது. அந்த நேரத்தில் நடைபாதையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இருப்பினும் நடைபாதையில் செல்ல முடியாமல் அவ்வழியே சென்ற பொதுமக்கள் சாலையில் இறங்கி நடந்து சென்றனர். அதேபோல் முறிந்து விழுந்த மரத்தின் பாதி கிளை, டேம்ஸ் சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இருந்ததால் அந்த வழியே சென்டிரல், சிந்தாதிரிபேட்டை மற்றும் எழும்பூரை நோக்கி சென்ற வாகனங்களுக்கு இடையூறாக அமைந்தது. இதையடுத்து வளாகத்தின் ஊழியர்களே விரைந்து செயல்பட்டு நடைபாதையில் விழுந்து கிடந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்றினர்.


Next Story