சின்னசேலம் அருகே டேங்கர் லாரி மீது மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து


சின்னசேலம் அருகே டேங்கர் லாரி மீது மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்து
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 2:13 AM GMT)

சின்னசேலம் அருகே டேங்கர் லாரி மீது மதுபான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தில் சிக்கியது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கண்ணபிரான்புரம் பகுதியில் தனியார் மதுபானம் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக 850 அட்டைப்பெட்டியில் மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கள்ளக்குறிச்சிக்கு நேற்று மதியம் வந்தது. லாரியை ஹரி கிருஷ்ணன் (வயது 38) என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, பங்காரம் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது, எதிர்பாராதவிதமாக, மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமானது. மேலும், லாரியின் பின்னால் இருந்த சில மதுப்பாட்டில்களும் உடைந்து சேதமானது.

இதுகுறித்து மதுபான தயாரிப்பு கம்பெனியின் மேலாளர் அருணாசலம் மகன் லட்சுமணன் வயது (48) சின்னசேலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story