பொள்ளாச்சி அருகேடிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி கவிழ்ந்தது-டிரைவர் உயிர்தப்பினார்

பொள்ளாச்சி அருகேடிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதி கவிழ்ந்தது- டிரைவர் உயிர்தப்பினார்
கோயம்புத்தூர்
நெகமம்
திருச்சியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி தாராபுரம் வழியாக பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை பாலக்காட்டை சேர்ந்த டிரைவர் ஜோன் ஓட்டி வந்தார். பொள்ளாச்சி சுந்தரகவுண்டனூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி ரோட்டின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. லாரி மோதியதால் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்தது கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். டிரான்ஸ்பார்மர் மீது லாரி மோதிய சம்பவம் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






