மீன் கழிவுநீரை சாலையில்கொட்டிச்சென்ற லாரி சிறைபிடிப்பு


மீன் கழிவுநீரை சாலையில்கொட்டிச்சென்ற லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் அருகே மீன் கழிவுநீரை சாலையில் கொட்டிச்சென்ற லாரி சிறைபிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

சிதம்பரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி நேற்று முன் தினம் மாலை மீன் ஏற்றிக்கொண்டு தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, மீன்களை பதப்படுத்தும் வகையில் குளிர்சாதனபெட்டி வசதிகொண்ட அந்த லாரியிலிருந்து சாலைமுழுவதும் துர்நாற்றத்துடன் மீன்கழிவுநீர் கொட்டிக்கொண்டே சென்றது. அப்போது புத்தூர் கடைவீதி பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீன் கழிவுநீர் மீண்டும் கொட்டாதவாறு ஓட்டுனர் நுழைவுபகுதியை அடைத்தார். இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, டிரைவரை எச்சரித்த பிறகு பொதுமக்கள் லாரியை விடுவித்தனர்.


Next Story