அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனம்; தள்ளிச்செல்லும் பழங்குடியின மாணவர்கள்


அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனம்; தள்ளிச்செல்லும் பழங்குடியின மாணவர்கள்
x
தினத்தந்தி 22 Jun 2023 1:15 AM IST (Updated: 22 Jun 2023 10:06 AM IST)
t-max-icont-min-icon

பழைய சர்க்கார்பதியில் அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனத்தை பழங்குடியின மாணவர்கள் தள்ளிச்செல்லும் நிலை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பழைய சர்க்கார்பதியில் அடிக்கடி பழுதாகும் பேட்டரி வாகனத்தை பழங்குடியின மாணவர்கள் தள்ளிச்செல்லும் நிலை காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என்று அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பழங்குடியின கிராமங்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தம்பம்பதி, பழைய சர்க்கார்பதி, புதிய சர்க்கார்பதி, நாகரூத்து ஆகிய கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளன. இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி பயில பழைய சர்க்கார்பதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஆனால் மேல்நிலை கல்வி பயில சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் மேல் நிலை கல்வியை பயில முடியாத நிலை இருந்தது.

பேட்டரி வாகனம்

இதை கருத்தில் கொண்டு பழைய சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடைக்கு செல்ல தன்னார்வலர்கள் உதவியுடன் வனத்துறையினர் ரூ.2½ லட்சத்தில் பேட்டரி வாகனத்தை ஏற்பாடு செய்தனர். அதில் 12 மாணவர்கள் அமரலாம். ஒருமுைற சார்ஜ் செய்தால், 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியும். இதன் மூலம் மாணவர்கள் மேல் நிலை கல்வி பயில சென்று வந்தனர்.

இந்த நிலையில் பேட்டரி வாகனம் திடீர் திடீரென பழுதாகி நடுவழியில் நின்று விடுகிறது. அது மீண்டும் சரியாகும் வரை சிறிது தூரம் மாணவர்கள் தள்ளிச்செல்லும் நிலை காணப்படுகிறது.

நடுவழியில் தவிப்பு

இதுகுறித்து பழைய சர்க்கார்பதி பழங்குடியின மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 115 குடும்பத்தினர் உள்ளனர். இங்கிருந்து சேத்துமடைக்கு மேல்நிலை கல்வி பயில 40 மாணவர்கள் சென்று வருகின்றனர். பஸ் போக்குவரத்து இல்லாததால், பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் பெற்றோருடன் செல்கின்றனர். மீதமுள்ளவர்கள், வனத்துறை வழங்கிய பேட்டரி வாகனத்தில் செல்கின்றனர். ஆனால் அடிக்கடி நடுவழியில் வாகனம் பழுதாகி நின்று விடுகிறது. இதற்கு காரணம், பழைய சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடை வரை உள்ள 2½ கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் மோசமாக கிடக்கிறது. இதனால் பேட்டரி வாகனம் பழுதாகி அடர்ந்த வனப்பகுதியில் மாணவர்கள் நடுவழியில் தவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைப்பதோடு வாகனத்தை பழுது நீக்கி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்


Next Story