பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் வாலிபர்


பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த விருதுநகர் வாலிபர்
x

பிலிப்பைன்ஸ் பெண்ணை விருதுநகர் வாலிபர் மணந்தார்.

விருதுநகர்


விருதுநகரை சேர்ந்த வாலிபர் லட்சுமணன். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் உடன் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அன்னாலிசா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் நேற்று விருதுநகரில் இந்து முறைப்படி அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட்டதாக மணமக்கள் தெரிவித்தனர். மணமகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விசா கிடைக்காததால் வர இயலவில்லை என மணமகள் தெரிவித்தார்.


Next Story