காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x

தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பருத்தி சேலை உற்பத்தி விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்காத உரிமையாளர்களை கண்டித்தும், தொழிலாளர் துறை அதிகாரிகளை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி, மற்றும் சி.ஐ.டி.யு, தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தளவாய்புரத்தில் அமைந்துள்ள செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story