அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதிஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல். ஏ. ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:-
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வருகிற 19-ந் தேதி வருகை தருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கிட வேண்டும். அவரது தலைமையில் ஆயிரம் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழிகளும் வழங்கப்படும் என்றார். முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை நினைவுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையான மணலூர்பேட்டை பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து தியாகதுருகத்தில் வரவேற்பு, கள்ளக்குறிச்சி பகுதியில் வலைதள பொறுப்பாளர்களின் கூட்டமும், முகவர்கள் பங்குபெறும் கூட்டமும் நடைபெறும். இடையில் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வார் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரும், துணைச் செயலாளருமான புவனேஸ்வரி பெருமாள், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்புராயலு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், துரை, கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், ராஜேந்திரன், அன்பு, மணிமாறன் மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.