குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 7:00 PM GMT (Updated: 23 July 2023 11:43 AM GMT)

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

களைகட்டிய சீசன்

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது.

இந்த சீசனை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் அலைமோதல்

நேற்று சனிக்கிழமை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

சாரல் மழை

மேலும், குற்றாலம் பகுதியில் காலையில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசியது.

23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story