ரேஷன் கடையை உடைத்து காட்டுயானை அட்டகாசம்


ரேஷன் கடையை உடைத்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடையை உடைத்து காட்டுயானை அட்டகாசம்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே நடுமலை எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையை தொடர்ந்து காட்டுயானை ஒன்று உடைத்து சேதப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நேற்றுடன் 4-வது முறையாக உடைத்துள்ளது. இது நடுமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டு தோட்டத்தில் உள்ள வாழைகளை தின்றுட்டு விட்டு செல்கிறது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானை ரேஷன் கடையில் அரிசி இல்லாத சூழலில் கட்டாயம் தொழிலாளர்களின் வீடுகளையும் உடைக்க தொடங்கிவிடும். எனவே வால்பாறை வனத்துறையினர் அந்த காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story