ரேஷன் கடையை மீண்டும் உடைத்த காட்டுயானை
ரேஷன் கடையை மீண்டும் உடைத்த காட்டுயானை
வால்பாறை
வால்பாறை பகுதியில் தாய்முடி எஸ்டேட், சோலையாறு எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து காட்டுயானைகள் முகாமிட்டு வருகிறது. இதில் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு வரும் யானைகள் கூட்டம், சமீபத்தில் அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. மேலும் அரிசியை தின்றதோடு சிதறடித்து வீணாக்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் காட்டுயானை கூட்டத்தை விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் தாய்முடி ரேஷன் கடையில் அதிகளவில் ரேஷன் அரிசி இருப்பில் வைக்கப்பட்டு இருந்ததால், மீண்டும் அந்த கூட்டத்தை சேர்ந்த காட்டுயானை ஒன்று, நேற்று முன்தினமும் உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றது. மேலும் ரேஷன் அரிசியை தின்றது. தொடர்ந்து தாய்முடி எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டு வருவதால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். அங்கு மானாம்பள்ளி வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.