ரேஷன் கடை ஜன்னலை உடைத்த காட்டு யானை


ரேஷன் கடை ஜன்னலை உடைத்த காட்டு யானை
x
தினத்தந்தி 27 Sept 2023 1:00 AM IST (Updated: 27 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே காட்டுயானை ஒன்று ரேஷன் கடை ஜன்னலை உடைத்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பள்ளத்துக்கால்வாய் பகுதியில் காட்டுயானை ஒன்று நேற்று அதிகாலை குட்டியுடன் வந்தது. பின்னர் அந்த யானை, அங்கிருந்த ரேஷன் கடையின் ஜன்னலை உடைத்தது. பின்னர் அதன் வழியாக தும்பிக்கை முலம் ரேஷன் அரிசியை தின்றது. பின்னர் அங்கிருந்து அவை வனப்பகுதிக்கு சென்றன. ஆனால் செல்லும் வழியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினர், அங்கு விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story