தமிழக கர்நாடக எல்லையில் கையில் குச்சியுடன் சென்ற நபரை துரத்திய காட்டு யானை


தமிழக கர்நாடக எல்லையில் கையில் குச்சியுடன் சென்ற நபரை துரத்திய காட்டு யானை
x

தமிழக கர்நாடக எல்லையில் கையில் குச்சியுடன் சென்ற நபரை துரத்திய காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் தமிழக கர்நாடக எல்லை காரப்பள்ளம் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் ஒரு இளைஞர் கையில் குச்சியுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவர் முன்னால் குட்டியுடன் ஒரு யானை சென்று கொண்டிருந்தது. அப்போது யானை திடீரென அந்த இளைஞரை பார்த்து துரத்த ஆரம்பித்தது. யானையிடம் தப்பு எந்த தப்பிக்க சில நேரம் ஓட்டம் பிடித்து தப்பித்தார். யானை பின்னர் வனப்பகுதியில் சென்றது.யானையின் தொடர் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர்.


Next Story