ஊருக்குள் புகுந்த காட்டு யானை


ஊருக்குள் புகுந்த காட்டு யானை
x
தினத்தந்தி 10 Aug 2023 2:15 AM IST (Updated: 10 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே காட்டு யானை ஊருக்குள் தொடர்ந்து புகுந்து வருகிறது. எனவே, ஊருக்குள் வராமல் தடுக்க கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே காட்டு யானை ஊருக்குள் தொடர்ந்து புகுந்து வருகிறது. எனவே, ஊருக்குள் வராமல் தடுக்க கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை, செளுக்காடி, ஈயமூலா, புழுக்கொல்லி, மீனாட்சி உள்ளிட்ட இடங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காட்டு யானை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வருகிறது. முக்கிய சாலையில் காலை, மாலை நேரத்தில் நடமாடி வருகிறது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக கூடலூர், தேவர்சோலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறினர். எனவே, காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போராட்டம் நடத்த முடிவு

இதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்து உள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் காட்டு யானை புகுந்து வாழை, பாக்கு மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் முக்கிய சாலையில் நடந்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்களை துரத்துகிறது. இதனால் காட்டு யானை எந்த நேரத்தில் வரும் என்று அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story