கடம்பூர் அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை; விவசாயிகள் அச்சம்


கடம்பூர் அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை; விவசாயிகள் அச்சம்
x

கடம்பூர் அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டு யானையால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றன. அவ்வாறு வெளியேறும் யானைகள் வனத்தையொட்டி உள்ள கிராமங்களுக்கு புகுந்து விடுகின்றன. மேலும் அங்குள்ள விவசாய தோட்டங்களிலும் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானைகளை விரட்ட முயன்றால், அவர்களையும் தாக்குவதற்கு ஓடி வருகின்றன. அதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் ஏக்கர் கணக்கில் பயிர்கள் நாசம் அடைகின்றன. இதுமட்டுமின்றி வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளுக்கும் வந்து நின்று விடுகின்றன. அதனால் அடிக்கடி போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

மயக்க ஊசிபோட்டு...

கடம்பூர் அருகே செங்காடு என்ற கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்தநிலையில் தினமும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானை, செங்காடு, பூதிக்காடு, ஏரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்து அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து நடமாடி வருகிறது. இதனால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்ட முயன்றாலும், உடனே செல்வதில்லை. பயிர்களை நாசப்படுத்திய பின்னரே செல்கின்றன. தகவல் கிடைத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானையை விரட்டி விட்டாலும், மீண்டும் தோட்டத்தை நோக்கி வந்துவிடுகின்றது. எனவே வனத்துறையினர் பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானையை மயக்க ஊசிபோட்டு பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story