அந்தியூர் அருகே ரோட்டில் நடமாடிய காட்டு யானை; போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே ரோட்டில் நடமாடிய காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே ரோட்டில் நடமாடிய காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரோட்டில் நடமாடிய யானை
அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக மைசூரு செல்லும் ரோட்டில் சுண்டப்பூர் பிரிவு பகுதியில் நேற்று காலை காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.
இதனால் அந்த வழியாக பஸ், லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர்.
இந்த நிலையில் யானை ரோட்டில் அங்கும், இங்கும் நடமாடியது. இதனை ஒரு சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றுவிட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானையால் அந்தியூர்-மைசூரு ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பர்கூர் வனத்துறையினர் கூறும்போது, 'வனப்பகுதியில் உள்ள சாலையை அடிக்கடி விலங்குகள் கடந்து வருகின்றன.
இதனால் அந்தவழியாக வாகனங்களில் செல்பவர்கள் ஹாரன் அடிப்பது, செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது போன்ற இடையூறுகள் எதுவும் ஏற்படுத்தக்கூடாது. அவைகள் தானாகவே வனப்பகுதிக்குள் சென்று விடும். எனவே பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்' என்றனர்.