திருவெண்ணெய்நல்லூர் அருகே வங்கிக்கு எடுத்து வந்த பணப்பை திடீர் மாயம் போலீசில் பெண் புகார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வங்கிக்கு எடுத்து வந்த பணப்பை மாயமானதாக போலீசில் பெண் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சரண்யா (வயது 25). கூலி தொழிலாளி. மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார். நேற்று மதியம் சுயஉதவி குழு பணமான 17 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போன், ரேஷன் கார், ஆதார் கார்டு ஆகியவற்றை ஒரு பையில் வைத்து, தனது மொபட்டில், பக்கவாட்டில் உள்ள கம்பியில் தொங்க விட்டபடி, பாவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தார். மொபட்டை நிறுத்திவிட்டு பார்த்த போது, பணம் இருந்த பை திடீரென மாயமாகி இருந்தது. வரும் வழியில் கீழே விழுந்ததா?, அல்லது யாரேனும் எடுத்து சென்றுவிட்டார்களா? என்று தெரியவில்லை.
பணம் திருடுபோனது குறித்து அவர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.