கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு பெண் பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு பெண் பலியானார்.
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு ஒரு பெண் பலியானார்.
தொற்று அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 10-ஐ கடந்து வருகிறது. இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு பெண் பலி
இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த 55 வயதான பெண்ணுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 17-ந் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோ னா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உப்பிலிபாளையம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இணை நோய்
இதற்கிடைேய, உயிரிழந்த பெண்ணுக்கு இணை நோய் இருந்ததன் காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர். கோவையில் கடந்த ஒரு ஆண்டாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு பெண் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.