மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி


மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
x

பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கி ஏறியபோது நிலைதடுமாறி விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பலியானார்.

திருவண்ணாமலை

ஆரணி

பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கி ஏறியபோது நிலைதடுமாறி விழுந்த பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பலியானார்.

சென்னை கே.கே.நகர் பகுதியில் உள்ள மணிமேகலை தெருவில் வசிப்பவர் பரமசிவம். இவரது மனைவி விஜயா (வயது 53), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராட்டினமங்கலம் ஈ.பி.நகரில் உள்ள சகோதரர் சிதம்பரம் என்பவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்று சிதம்பரத்துடன் மோட்டார் சைக்கிளில் விஜயா பின்னால் அமர்ந்து கொண்டு வேதாஜிபுரத்தில் உள்ள தம்பி பாலச்சந்தர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் திரும்பிக்கொண்டிருந்தனர்.

குருகுலம் அருகே வரும்போது வளைவில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கி ஏறியபோது மோட்டார்சைக்கிளிலிருந்து விஜயா கீழே தவறி விழுந்தார்.அப்போது பக்கவாட்டில் சென்ற அரசு பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி விஜயா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் சிதம்பரம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்கு பதிவு செய்து இறந்த விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்த விஜயாவுக்கு ரம்யா என்ற மகள் உள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story