மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு


மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே கட்டாலங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த ஆபிரகாம் மனைவி சிமியாள் பேரின்பம் (வயது 33). இவர் கடந்த 7-ந் தேதி இரவு 8 மணியளவில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் திருமண நிச்சயதார்த்த வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். குமாரபுரத்திற்கும், கட்டாலங்குளம் கிராமத்திற்கும் இடையே வந்தபோது அந்த வழியாக அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சிமியாள் பேரின்பம் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிமியாள் பேரின்பம், சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story