நடுரோட்டில் பெண் போலீஸ் திடீர் ரகளை


நடுரோட்டில் பெண் போலீஸ் திடீர் ரகளை
x

தூத்துக்குடியில் நடுரோட்டில் பெண் போலீஸ் திடீர் ரகளையில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி-பாளையங்கோட்டை நடுரோட்டில் பெண் போலீஸ் ஒருவர் வாகனங்களை வழிமறித்து திடீரென ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் ஆவேசம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அந்த பெண் போலீசை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.

மேலும் அந்த பெண் போலீஸ் மன அழுத்தம் காரணமாக இது போன்று நடந்து கொண்டதாகவும், மன அழுத்தத்துக்காக மாத்திரை சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story