மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சாலையில் தவறி விழுந்து சாவு
அம்பையில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் சாலையில் தவறி விழுந்து இறந்தார்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை அருகே உள்ள அகஸ்தியர்பட்டி கல்சுண்டு காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவருடைய மனைவி அருணாசலம் (வயது 65). இவரது மகன் சுந்தர். பொக்லைன் ஆபரேட்டராக உள்ளார். இந்தநிலையில் அருணாசலம் தனது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் அம்பைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பை கோடாரங்குளம் விலக்கு அருகில் திடீரென தவறி சாலையில் விழுந்தார். இதில் மூக்கில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த அவரை உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story