2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
வாணியம்பாடி அருகே மாமியார்-மருமகள் தகராறில் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மூவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி அருகே மாமியார்-மருமகள் தகராறில் 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. மூவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாமியார்-மருமகள் சண்டை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு வைத்தீஸ்வரி (4), இனியா (1½) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சரவணன் சிங்கப்பூரில் பணிக்காக சென்றுவிட்டார். இதனால் தங்கமணி ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வந்தார். இதனிடையே தங்கமணிக்கும் அவரது மாமியார் பார்வதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
விஷம்
இதனால் மனவேதனை அடைந்த தங்கமணி வீட்டில் இருந்த எலி மருந்தை உட்கொண்டு தனது 2 மகள்களுக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தங்கமணி வீட்டிற்கு சென்று மயங்கி நிலையில் இருந்த 2 குழந்தைகள் மற்றும் தங்கமணியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கவலைக்கிடமான நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.