நகை-பணத்துடன் கள்ளக்காதலனோடு ஓட்டம் பிடித்த பெண்
கணவர், குழந்தையை தவிக்கவிட்டு பணம், நகையுடன் கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.
கணவர், குழந்தையை தவிக்கவிட்டு பணம், நகையுடன் கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
கோவையை சேர்ந்த 30 வயதான தொழிலாளிக்கும், 28 வயதான பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந் தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது.
இதனால் கணவர் வேலைக்கு சென்றதும், அந்த பெண் தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.
இதை அக்கம் பக்கத்தினர் மூலம் அறிந்த அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியை கண்டித்து உள்ளார். மேலும் அவருக்கு அறிவுரை கூறி உள்ளார்.
நகை-பணத்துடன் ஓட்டம்
அதை பொருட்படுத்தாமல் அந்த பெண், பெயிண்டருடன் கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கணவர் வேலைக்கு சென்றதும், அந்த பெண் தனது குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு, பணம் மற்றும் நகையை எடுத்துக் கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
வேலை முடிந்து மாலையில் கணவன் வீட்டுக்கு வந்த போது, குழந்தை மட்டும் அழுதபடியே இருந்தது. அங்கு மனைவியை காணாததால் செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது போல் பெயிண்டரின் செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர போலீசார் விசார ணை நடத்தினர். இதில், அந்த பெண், தனது கணவர் மற்றும் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் மற்றும் கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருகிறார்கள்.