தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்... உணவுக்குழாயில் சிக்கியது - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்... உணவுக்குழாயில் சிக்கியது - அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x

விருதுநகரில் தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பல்செட் அகற்றப்பட்டது.

விருதுநகர்,

தூக்கத்தில் பல்செட்டை விழுங்கிய பெண்ணுக்கு சவாலான முறையில் மருத்துவம் செய்து விருதுநகர் அரசு கல்லூரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண் (57 வயது), தூக்கத்தில் பல்செட்டை விழுங்கியுள்ளார். இதனால் மூச்சு திணறல் ஏற்படவே மருத்துவரை அணுகியுள்ளார். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, கம்பியுடன் கூடிய பல்செட் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக மயக்க மருந்து செலுத்தி வாய் வழியாக குழாய் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நோயாளிக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அறுவை சிகிச்சை மூலம் பல்செட் எடுக்கப்பட்டதாகவும், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். தற்போது மூச்சுத்திணறல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிரமம் இல்லாமல், சுப்புலட்சுமி நலமாக உள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.


Next Story