கையில் ஆபரேஷன் செய்யப்பட்ட பெண் திடீர் உயிரிழப்பு - மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
கடலூரில் தனியார் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பெற்ற பெண் திடீரென உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை அடித்து உடைத்தனர்.
கடலூர்:
கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா (வயது 58) என்பவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவிற்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதை கேட்ட உறவினர்கள் அதிர்ச்ச அடைந்தனர்.
மேலும் மருத்துவமனையின் தவறான சிகிச்சை முறையே மீனாவின் உயிரிழப்புக்கு காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் மீனாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தான் உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர். இதை ஏற்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரும் தனித் தனியாக புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.