திருநம்பியுடன் தன்பாலின உறவில் இருந்த பெண் - கணவர் பிரித்து அழைத்து வந்ததால் விரக்தியில் தற்கொலை
தூத்துக்குடி அருகே, தன்பாலின உறவில் இருந்த தோழியிடம் இருந்து பிரித்து அழைத்து வந்ததால், விரக்தி அடைந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த திருமணமான பெண் காவலருக்கும், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய புதுச்சேரியை சேர்ந்த பெண் காவலருக்கும் இடையே தன் பாலின பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பெண் காவலர் பணிநிமித்தமாக சென்னைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்ற நிலையில், குடும்பத்தினர் அவரை தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் கணவர் புகார் அளித்த நிலையில், செல்போன் எண்ணை வைத்து அவர் புதுச்சேரியில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தனது தோழியுடன் இருந்த பெண் காவலரை, குடும்பத்தினர் தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில், விரக்தி அடைந்த பெண் காவலர், வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.