கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட பெண்


கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட பெண்
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:46 PM GMT)

குடும்ப தகராறில் பெண் தூங்கி கொண்டிருந்த கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டார்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சேவகப்பெருமாள். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவருடன் சேவகப்பெருமாள் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது போதையில் வந்த சேவகப்பெருமாள், ராணியுடன் தகராறில் ஈடுபட்டாராம். பின்னர் சேவகப்பெருமாள் குடிபோதையில் படுத்துவிட்டார்.

இதற்கிடையே கணவர் மீது கோபம் அடைந்த ராணி வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி தூங்கி கொண்டிருந்த கணவர் சேவகப்பெருமாள் மீது போட்டார். அதில் பலத்த காயம் அடைந்த சேவகப்பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story