திருக்கோவிலூர் அருகேரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளிகொலையா? போலீஸ் விசாரணை


திருக்கோவிலூர் அருகேரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளிகொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே ரத்தக்காயங்களுடன் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வி. சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடைசாமி மகன் விஜயகுமார் (வயது 37). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த தனது நண்பர்கள் விஜயகுமார், சசிகுமார், மணிகண்டன், கன்னியப்பன், ஏழுமலை, பிரபாகரன் ஆகியோர்களுடன் வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தார்.

அதன்பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அருகில் உள்ள பரனூர் கிராம எல்லையில் உள்ள கிரீன் கார்டன் அருகே, ஒரு பனை மரத்தடியில் விஜயகுமார் தலை மற்றும் கைகளில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.

சாவில் சந்தேகம்

இதுபற்றி அறிந்த அவரது குடும்பத்தினர் அங்கு சென்று, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து விஜயகுமாரின் தந்தை பாவாடைசாமி அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதன்பேரில், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த விஜயகுமாரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா?

மேலும் விஜயகுமார் எப்படி இறந்தார்?, யாரேனும் கொலை செய்தார்களா?. நண்பர்களுடன் சேர்ந்து சென்றவர் தனியாக இறந்து கிடந்ததன் மர்மம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story