வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி


வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி
x

கீரமங்கலம் அருகே வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

தொழிலாளி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் மணவாளன் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55).தொழிலாளி. இவர் குடும்பத்தில் யாரும் இல்லாத நிலையில் தனியாக வசித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் காயமடைந்து நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்த இவருக்கு அருகில் உள்ளவர்கள் உணவு வாங்கி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தங்கராசு வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திறந்து கிடந்த தங்கராசு வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

ரத்த வெள்ளத்தில்...

அப்போது ரத்த வெள்ளத்தில் தங்கராசு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது கழுத்து மற்றும் கால், இடுப்பு பகுதிகளில் பாட்டிலால் குத்தியும், பாட்டிலை உடைத்திருந்த படுகாயம் இருந்தது. மேலும் அவரால் பேச முடியவில்லை.

இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story