சுகாதார ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த தொழிலாளி


சுகாதார ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த தொழிலாளி
x

சுகாதார ஆய்வாளரை கன்னத்தில் தொழிலாளி அறைந்தார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே தூத்தூர் ஊராட்சி பகுதியில் நம்ம ஊர் சூப்பர் திட்டத்தின்படி சுகாதாரத்துறையினர் சுகாதார களப்பணிகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த பிடாரன் மகன் மாணிக்கம் (வயது 45) என்பவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சுகாதாரத்துறையினர், டெங்கு களப்பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 7 பேர் சுகாதாரப் பணிகள் செய்து கொண்டிருந்தபோது சுகாதார ஆய்வாளர் தியாகராஜனிடம், மாணிக்கம் என்பவர் வாய்க்காலில் கழிவுநீர் செல்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் வாய்க்காலில் கழிவுநீர் சொல்லாமல் வேறு என்ன செல்லும் என பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் சுகாதார ஆய்வாளரை கன்னத்தில் அடித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story