சென்னை விமான நிலையத்தில் 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை


சென்னை விமான நிலையத்தில் 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை
x

சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.

சென்னை

மீனம்பாக்கம்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது. இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.

அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.

இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உணவு பொருட்கள் அடங்கிய இந்த பைகளை, சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story