இளம் யோகா ஆசிரியர் புதிய உலக சாதனை - குவியும் பாரட்டு


இளம் யோகா ஆசிரியர் புதிய உலக சாதனை - குவியும் பாரட்டு
x

கும்மிடிப்பூண்டியில் இளம் யோகா ஆசிரியர் ஒருவர் 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்து உள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சூரியநாராயணன்- புஷ்பலதா தம்பதியினரின் மகள் சந்தியா (வயது 25). இளம் யோகா ஆசிரியரான இவர், கடினமான விருச்சிகாசனத்தில் நின்றபடி 26 வினாடிகளில் இரண்டு க்யூப்களை சேர்த்து புதிய உலக சாதனை படைத்து உள்ளார்.

இவரது சாதனை, இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் ஆசிஸ்ட் உலக சாதனை ஆகிய மூன்று புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. உலக சாதனை படைத்த யோகா ஆசிரியர் சந்தியாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Related Tags :
Next Story