செஞ்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


செஞ்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:46 PM GMT)

செஞ்சி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் வினிதா(வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும், செஞ்சி அருகே உள்ள மூல நெல்லிமலை கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் அவர்கள் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார்களாம். இந்த நிலையில் வினிதா சுய உதவிக்குழு மூலம் கணவருக்கு ரூ.3 லட்சம் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தவணை கட்ட பணம் கேட்ட போது அர்ச்சுனன், வினிதாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. மேலும் பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வினிதா திருப்பூரில் இருந்து கலையூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மதியம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story