தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவித்த இளம்பெண் திடீர் சாவு
அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மின்தடையால் மாற்றப்பட்ட இளம்பெண், தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூர்
அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மின்தடையால் மாற்றப்பட்ட இளம்பெண், தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீர் மின்தடை
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஊத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். அங்குள்ள பனியன் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வான்மதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை நேற்று முன்தினம் பிரசவத்துக்காக அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் விக்னேஸ்வரன் அனுமதித்தார். அங்கு அறுவை சிகிச்ைச மூலம் பிரசவம் பார்க்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் திடீரென மின்தடை ஏற்பட்டது. மேலும் ஜெனரேட்டரும் பழுதானது. இதனால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
முற்றுகை
இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவி வான்மதியை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதித்தார். அங்கு வான்மதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தாயையும், சேயையும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று திடீரென வான்மதி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர், அன்னூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். மேலும் உரிய நேரத்தில் பிரசவம் பார்க்காததே வான்மதியின் இறப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இது தவிர சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதோடு கோவை-அன்னூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வான்மதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் வான்மதி இறப்பு குறித்து அன்னூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ேமலும் ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் யாரும் முன் அனுமதி பெறாமல் உள்ளே வரக்கூடாது என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.