பைக்கில் வந்து காவிரி ஆற்றில் விழுந்த இளைஞரால் பரபரப்பு
நாமக்கல்லில் காவிரி ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, காவிரி ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் என்பவர், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, காவிரி ஆற்றில் செல்லும் பழைய பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர், திடீரென பாலத்தின் மீது நின்று குதித்துள்ளார். வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார், 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி, ஆற்றில் மூழ்கிய ரியாஸ்கானின் உடலை மீட்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story