திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் விரக்தி அடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார்.
மாதவரம்,
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, சின்னமாத்தூர், பாரதி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் டேனியல் ராஜா. இவருடைய மகள் ஏஞ்சல்(வயது 23). இவர், மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்(24) என்பவரை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் தனுஷ், ஏஞ்சலை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஏஞ்சல், நேற்று முன்தனம் இரவு தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், தூக்கில் தொங்கிய ஏஞ்சலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தங்கள் மகள் தற்கொலைக்கு காரணமான தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.