வாலிபர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு..!


வாலிபர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு..!
x

சிதம்பரம் அருகே பெற்றோர் பைக் வாங்கித் தராததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம்:

சிதம்பரம் குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபீர் முகமது இவருடைய மகன் முகமது ரியாஷ், 24,வேலைக்கு ஏதும் செல்லவில்லை. முகமது ரியாஷ் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என பெற்றோரிடம் தகராறில் ஈடுப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீடு வந்த முகமது ரியாஷ், பைக் வாங்கி தராததால் பெற்றோரிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை, பெற்றோர்கள் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து பார்த்தபோது, முகமது ரியாஷ், சேலையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story