வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது


வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2022 7:30 PM GMT (Updated: 9 Dec 2022 7:30 PM GMT)

ஆத்தூரில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் கடைவீதி ஆர்யா தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 54). வியாபாரி, இவர் நேற்று மதியம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரை வழிமறித்து, பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500-யை பறித்துக்கொண்டு ஓடினார். உடனே அவர் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து, ஆத்தூர் போலீசில் ஒப்படைந்தனர். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆத்தூர் பாரதியார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் ஹரிஹரன் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஹரிஹரன் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story