விருத்தாசலத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது


விருத்தாசலத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதியில் சம்பவத்தன்று பெண் ஒருவர்சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண், நகையை கையில் கெட்டியாக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்த விருத்தாசலம் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் அரியலூர் மாவட்டம், ஓடையூர் காலனி தெருவை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story